திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக வெளி மாநில மதுபானங்கள் விற்கப்படுவதாக அவுநாசிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடந்து அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(39) என்பவர் தனது மளிகைக்கடையில் விற்படைக்காக வெளி மாநில மதுபானைங்களை பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது மளிகைக் கடையில் சோதனை செய்த மதுவிலக்கு போலீசார் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 51 கர்நாடக மாநில மதுபானங்களை பறிமுதல் செயதனர். தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்ட ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.