நீண்ட நேரம் நிற்பதன் காரணமாக பெரும்பாலான நேரத்தில் கால்களில் வீக்கம் ஏற்படலாம். எடிமா என்று அழைக்கப்படும் வழக்கமான கால் வீக்கமானது ஹைபர்டென்ஷன், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் அல்லது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். உடல் திசுக்களில் அதிகப்படியான திரவம் சேமிக்கப்படும் பொழுது வீக்கம் ஏற்படுகிறது. இது மோசமான ரத்த ஓட்டம் அல்லது திரவம் தக்கவைப்பின் விளைவாக இருக்கலாம். போதுமான அளவு தண்ணீர் பருகவும், உப்பு உட்கொள்ளலை குறைத்துக் கொள்ளவும்.