திருப்பூர்: விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க கோரி காவல் நிலையத்தில் மனு

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட, சேமலை கவுண்டர் பாளையத்தில் தோட்டத்தில் வசித்து வந்த விவசாயிகள் தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடித்து படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில் பல்லடம், கள்ளகிணற்றில் நான்கு விவசாய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மறைவதற்குள் மீண்டும் இந்த படுகொலை மாவட்ட மக்களிடையேயும், விவசாயிகளிடையும் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ச்சியாக விவசாயிகளின் தோட்டங்களில் மோட்டார் பம்ப் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் அவர்களது உயிரையும், உடைமையும் பாதுகாத்துக் கொள்வதற்காக காவல்துறை விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி உரிமம் வழங்குவது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனக்கூறி இன்று (டிசம்பர் 1) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி