உடுமலை: பூசாரி நாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறப்பு-மகிழ்ச்சி

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் பூசாரி நாயக்கன் குளம் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் பாசனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை கால்நடைகளுக்கு குடிநீர் இல்லாமல் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
இப்பகுதி விவசாயிகள் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் முதல்வர் இன்று தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பூசாரி நாய்க்கன் குளத்திற்கு இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை
20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது திறந்த விடப்பட்ட தண்ணீரை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சுவாமி தலைமையில் விவசாயிகள் பொதுமக்கள் மலர் தூய் மரியாதை செய்தனர்
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை
இளம் செயற்பொறியாளர் விஜயசேகரன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மற்றும் பூசாரி நாயக்கன் குளம் பாசன சபை நிர்வாகிகள் காளிமுத்து , மற்றும் மாடர்ன் மகாலிங்கம் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி