உடுமலை: அமைச்சர் சாமிநாதன் பேட்டியால் விவசாயிகள் அதிருப்தி

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் எரி சாராய உற்பத்தியை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில், செய்தித்துறை அமைச்சர் மு. பே சாமிநாதன் மின் மோட்டாரை இயக்கி துவக்கி வைத்தார். நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில். அமைச்சர் பேசும்போது, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் தயாரிக்கும் பணிக்காக, இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. ஏறத்தாழ 3507 மெட்ரிக் டன் கையிருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் எத்தனால் தயாரிக்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பாரமரிப்பு இல்லாததால் அரவை இயந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி எப்போது ஒதுக்கப்படும் என செய்தியாளர் கேட்டதற்கு, நிதி பற்றாக்குறையாக இருப்பதால் தற்போது கூட்டுறவு சர்க்கரை ஆலையை பராமரிக்க முடியவில்லை என்று அமைச்சர் பதிலளித்தார்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் பல போராட்டங்கள் நடத்தி இருந்த நிலையில் இன்று(அக்.13) அமைச்சர் சாமிநாதன் நிதி இல்லை என்று கூறியதற்கு விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி