திருப்பூர் மாவட்டம் உடுமலை காந்தி சதுக்கம் பகுதி சேர்ந்தவர் தீபராஜ், கூலித் தொழிலாளி. சம்பவ தினத்தன்று இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார் அரிவாளால் தீபராஜாவை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபராஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். இதுகுறித்து உடுமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.