'கங்குவா' இசை வெளியீட்டு விழா.. தேதியை அறிவித்த படக்குழு

56பார்த்தது
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கங்குவா'. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படம் உலக அளவில் வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

நன்றி: StudioGreen2

தொடர்புடைய செய்தி