திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது இதனால் பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை
தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி தற்பொழுது கோவில் நிர்வாகம் தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் மேலும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.