கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் பக்தர்கள் குவிந்தனர்

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமராவதி ஆற்றில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மாதமாதம் அமாவாசை வந்தாலும் ஆடி, தை, மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை சிறப்பு பெற்றவை. அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையும் மற்றும் குடும்பம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.
காய்கறிகள் பழங்கள் பிண்டங்கள் வைத்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அதனை அமராவதி ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபாடு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி