பொரி குறைந்த கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது. இதனால் டயட் இருப்பவர்கள் தாராளமாக பொரி சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பொரி சாப்பிடுவதால் சரியாகும். உடற்பயிற்சி செய்பவர்கள் தினமும் பொரியை சாப்பிடுவதால் உடலுக்கு போதுமான அளவு ஆற்றல் கிடைக்கும். பொரியில் உள்ள கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, மற்றும் பைபர் உள்ளிட்ட அத்தியாவசிய சத்துக்கள் எலும்பு செல்கள் நன்றாக வளர்ச்சி அடையவும் சீரான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.