சார்பதிவாளரை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டம்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில்
சார்பதிவாளர் தாமோதரன் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அருகிலுள்ள துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி, மற்றும் அவரது மகன் விஜயராஜா ஆகியோரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, துரைராஜா என்பவரின் மனைவி ராஜாமணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடித்தனமாக பத்திரப்பதிவு செய்துள்ளார். இதற்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்ததாகவும் இதற்கு பதினைந்து லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சார்பதிவாளரை கண்டித்து கடந்த ஜூலை 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும்
சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று காலை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே மாவட்ட அதிகாரிகள், கணியூர் சார் பதிவாளர் தாமோதரன் மீது நடவடிககை எடுப்பதாக கூறியதன் பேரில் முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
இதில் 50 மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி