ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று(டிச.04) ஏவப்படவிருந்த பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை மாலை விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக உருவாக்கிய 'புரோபா-3’ என்ற செயற்கைக்கோள் இஸ்ரோவின் ராக்கெட் மூலம் இன்று மாலை 4.08க்கு மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.