தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நேத்ரன் புற்றுநோயால் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 47 வயதில் அவர் காலமாகியுள்ளார். அவர் இறப்பதற்கு 3 வாரங்களுக்கு முன்பு தனது மகள் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் நேத்ரன். அந்த பதிவில், இரண்டாவது மகள் அஞ்சனா, வீட்டிலேயே நாட்டு சர்க்கரை வைத்து பிஸ்கட்டுகளை செய்து கொடுத்ததாகவும், அது மிகவும் சுவையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதுவே அவரது கடைசி பதிவாகும்.