காங்கேயம் அருகே சாராயம் காய்ச்சிய பெண் கைது

82பார்த்தது
காங்கேயம் அருகே ஆலம்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் தங்குமுத்து. இவரது மனைவி ருக்மணி (வயது 65). இவர் வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காங்கேயம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவரது வீட்டிற்கு உதவி ஆய்வாளர் கார்த்திக்குமார் தலைமையிலான காவல்துறையினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு அவர் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ருக்மணியை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 20 லிட்டர் சாராய ஊறலையும் 1 லிட்டர் சாராயத்தையும் போலீசார் கைப்பற்றி கீழே ஊற்றி அழித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி