வெள்ளக்கோவிலில் பி. ஏ. பி பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

56பார்த்தது
வெள்ளக்கோவிலில் பி ஏ பி பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று இரவு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
விவசாயிகள் கூறியதாவது: - இதில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்கால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. கோர்ட்டு உத்தரவுப்படி கிடைக்க வேண்டிய பாசம் நீரை பெரும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தற்போது முதல் மண்டல 2வது சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விதிமுறைகளை படி தர வேண்டிய தண்ணீரை விட குறைவாக இருப்பதால் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. திருமூர்த்தி அணையில் இருந்து 30 நாட்களுக்கு தேவையான தண்ணீர் திறக்கப்படும் நிலையில் வெள்ளகோவில் கிளை கால்வாய்க்கு 18 நாட்கள் தான் தண்ணீர் கிடைக்கும் என நீர் பாசன துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 5 சுற்று வழங்க வேண்டிய நீரின் அளவு அணையில் இருந்து திறக்கப்பட்ட 2 சுற்றுகள் கூட தெளிவாக பாசனப்பகுதியை வந்து சேரவில்லை என்றால் அந்த தண்ணீர் எங்கே சென்றது. வாய்க்காலில் நடைபெறும் தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நீர் திருட்டே காரணமாகும். கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது மற்றும் நீர் திருட்டை தடுக்க வலியுறுத்தியும் 19ஆம் தேதிக்கு முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பிஏபி வெள்ளகோவில் கிளைகள் சங்கத் தலைவர், விவசாய சங்க பிரதிநிதிகள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி