அடுத்த 3 நாட்களுக்கு கவனமா இருங்க

68பார்த்தது
அடுத்த 3 நாட்களுக்கு கவனமா இருங்க
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது.