இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மொபைல் கேம்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கேம்களை விளையாடும்போது மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் சுரந்தாலும் உடல் உழைப்பு இல்லாததால் கலோரிகள் குறைவது தடைபடுகிறது. இதன் விளைவாக மூளை குழப்பத்திற்கு உள்ளாகி கவனச்சிதறல், மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிகமாக கேம் விளையாடுவது விரல் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.