கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. எனினும் இதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பல் வலியை போக்கும்.