சாலை விபத்தில் எம்எல்ஏ உதவியாளர் உயிரிழப்பு

51பார்த்தது
சாலை விபத்தில் எம்எல்ஏ உதவியாளர் உயிரிழப்பு
தஞ்சை: சாலை விபத்தில் கும்பகோணம் எம்எல்ஏவின் உதவியாளர் உயிரிழந்தார். கும்பகோணம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவர், கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகனிடம் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு (செப்., 11) பிரகாஷ் டூவீலரில் தஞ்சாவூா் நோக்கி சென்று கொண்டிருந்தார். பள்ளியக்ரஹாரம் அருகே நிலை தடுமாறிய அவர், சிமெண்ட் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி