காங்கேயத்தில் காவலர்களை தாக்கிய நான்கு பேர் கைது

76பார்த்தது
காங்கேயத்தில் காவலர்களை தாக்கிய நான்கு பேர் கைது
17 வயது மாணவி நடந்து சென்ற போது இலங்கை அகதிகள் முகமை சேர்ந்த விஸ்வா (20) என்ற இளைஞர் சாலையில் நின்று கைகாட்டியதாக  கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற  வெள்ளகோவில் காவலர் மணிகண்டன் பிடித்து விசாரித்துவிட்டு சந்தேகத்தின் பெயரில் காங்கேயம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் விஸ்வாவை காவல் துறையினர் அழைத்து சென்றது இலங்கை அகதிகள் முகாமிற்குள் இருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விஸ்வாவின் சகோதர்கள் மற்றும் இலங்கை முகாமை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் காங்கேயம் காவல் நிலையம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோமதி மற்றும் பெண் காவலர்கள் காவல்நிலையத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்கையில் பெண் மற்றும் ஆண் காவலர்களை அடிக்கும் விதத்தில் முண்டியடித்து கொண்டு கீழே தள்ளிவிட்டு தாக்கினர். ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவலர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்தனர். இதில் 3 நபர்கள் மட்டுமே மாட்டிக்கொண்டனர் மற்றவர்கள் தப்பி ஓடினர். பின்னர் விசாரணையில் விஸ்வாவின் சகோதரர்களான விஜய் (28), விவேக் (24), கோபிநாத் (22)  ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி