கருத்தடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26-ம் தேதி ‘உலக கருத்தடை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. கருத்தடை குறித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். கருத்தடை பற்றிய புரிதலை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படுத்தவும், கருத்தடை மருந்துகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையை முறையாக பெறுவதன் அவசியத்தையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.