ஆடி மாத பௌர்ணமி சிவன்மலை முருகன் கோவில் சிறப்பு பூஜை

66பார்த்தது
ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி சிவன்மலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றத. பின்னர் தங்கத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.


காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை புகழ்பெற்ற முருகன் திருகோவில் அமைந்துள்ளது. இங்கு முருக பெருமான் வள்ளி தெய்வானை உடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இந்த கோவில் சிறப்பு இங்கு உள்ள உத்தரவு பெட்டியாகும். இங்கு வரும் பக்தர்கள் கனவில் தோன்றும் பொருளை இந்த உத்தரவு பெட்டிகள் வைத்து அடுத்து உத்தரவு பொருள் வரும் வரை பூஜை செய்வார். இதனால் இந்த பொருள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்  என்பது அனைவரது ஐதீகம். இந்த பிரசித்தி பெற்ற வழிபாட்டு தளத்தில் நேற்று ஆடி மாத பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் அனைத்து பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவிலை சுற்றி தங்கத்தேரில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து கோவில் சுற்றி வந்தனர். மேலும் கோவிலுக்கு வந்த சிலர் வள்ளி கும்மியாட்டம் ஆடி பௌர்ணமி தினத்தை கொண்டாடினர். தங்கத்தேரில் வலம் வந்த முருகனுக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்கள் அரோகரா கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி