வெள்ளகோவில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கச்சேரி வலசில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. இதை அடுத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த செல்லமுத்து (வயது 72) டிஆர் நகர் முருகேசன் 58, அகலரப்பாளையம் புதூர் நாகராஜ் (38), சொரியன் கிணத்து பாளையம் வினோத் (30), அழகேசன் (50), பச்சா கவுண்டன் வலசு கபிலன் (38), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ. 940 பறிமுதல் செய்யப்பட்டது.