தாராபுரத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்!

81பார்த்தது
தாராபுரத்தில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது நூற்றாண்டுகள் பழமையான அருள்மிகு வேட்டைக்கார சாமி மாசடச்சி அம்மன் திருக்கோயில், , இக்கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது
தங்களது உறவினர்களுக்குள் குடும்ப உறவுகள் வளம் பெறவும் , கல்வி, செல்வம், நாட்டில் வியாபாரம் செழித்து பொருளாதார சிறக்கவும், திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு மனம் விரும்பிய வரன் கிடைக்க வேண்டியும், குடும்பங்களில் அனைவரும் நோய் நொடியின்றி சந்தோசமான வாழ்க்கையை பெறவும் வேண்டி அருள்மிகு வேட்டைக்கார சாமி மாசடச்சி அம்மனுக்கு சம்பங்கி, ரோஜா , சாமந்தி , மல்லிகை மலர்களால் மந்திரங்கள் ஓத ஆராதனை நடத்தப்பட்டது,
திருவிளக்கு பூஜையில் மஞ்சள் , குங்குமம், புதுமஞ்சள் கயிறு புத்தாடைகள் வைத்து பெண்கள் திருவிளக்கு பூஜையை நடத்தினர், முற்றிலும் பெண்களாக கலந்துகொண்டு நடத்தப்பட்ட இத்திருளுக்கு பூஜையில் கலந்து கொள்ள திருப்பூர் சேலம் ஈரோடு உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாது மைசூர் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் உறவின் முறையினர் சார்ந்த பெண்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்

தொடர்புடைய செய்தி