தாராபுரம்: வேட்பாளர் விஜயகுமாருக்கு வாக்கு சேகரிப்பு!

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு அமமுக, அதிமுக ஓபிஎஸ் அணி, பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கூட்டணி நிர்வாகிகள் கட்சிகளுடன்

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்தாரை, பெரிய காளியம்மன் கோவில் பகுதியில் தேர்தல் பரப்புரையை துவங்கினார். அப்போது
வீடு வீடாக சென்று அமமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எம். ஆர். ராஜேந்திரன், நகரச் செயலாளர் சிவராம், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் டி. டி. கே. காமராஜ், பாஜக நகரத் தலைவர் விநாயக சதீஷ், பாமக நகர செயலாளர் பிரவீன் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி வி. எம். சுப்பிரமணியம், சுஜித், ஆகியோர் சைக்கிள் சின்னத்திற்கு
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி