தாராபுரம்: நீட் தேர்வில் விவேகம் பள்ளி மாணவி சாதனை!

50பார்த்தது
தாராபுரம்: நீட் தேர்வில் விவேகம் பள்ளி மாணவி சாதனை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 2024 ஆம், ஆண்டு நடை பெற்ற நீட் தேர்வில் விவேகம் பள்ளி மாணவி செல்வதர்ஷினி 680 மதிப்பெண்களுடன் பள்ளியளவில் முதலிடம் பெற்று தனது மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார். விவேகம் பள்ளியில் பயின்ற இம்மாணவி இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டதோடு ஆசிரியர்களின் ஆகச் சிறந்த வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தியும் இலக்கினை அடையும் மன உறுதியுடன் பெற்றோரின் (ஆசி) ஒத்துழைப்பும் மாணவிக்கு வெற்றியைத் தேடிதந்துள்ளது. மாணவி அடைந்த வெற்றியால் மாநில அளவில் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரியில் பயிலவிருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடும் முயற்சியால் வெற்றி பெற்ற மாணவியை விவேகம் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன், பள்ளியின் செயலாளர் பூபதி மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் மாணவிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி