கோவை நல்லறம் அறக்கட்டளை, அம்மா ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன என முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவ மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைந்து, தங்களின் அரசுப்பணி கனவை நனவாக்கிக் கொள்ளவும், வாழ்வில் வளம் பெறவும் வாழ்த்துகிறேன் என எக்ஸ் தளத்தில் வேலுமணி பதிவிட்டுள்ளார்.