18 வயது நிரம்பிய ஆண் பெண் இருவரும் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களாகவே தேர்வு செய்து கொள்ளலாம். அவர்களின் உரிமையை பெற்றோரின் அன்பும், அக்கறையும் கட்டுப்படுத்தாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதத்தை காரணம் காட்டி 27 வயது மகளின் காதலை அவரின் தந்தை ஏற்க மறுத்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. தனிநபரின் விருப்பத்தை மதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.