குண்டடம்: பிஏபி பாசன விவசாயிகள் சாலை மறியல்!

1085பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் -குண்டடம் பிஏபி வாய்க்காலில் 2-ஆவது சுற்று தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருவதாகக் கூறி குண்டடம் அப்பகுதி விவசாயிகள் கோவை டு ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் குண்டடம் பகுதியில் உயிர் தண்ணீர் கேட்டு சாலை மறியல் ஈடுபட்டனர்.


தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் ருத்ராவதி, செங்காளிபாளையம், கணபதிபாளையம், சுங்கிலியம்பாளையம் உள்ளிட்ட பிஏபி பாசனம் பெறும் பகுதிகளுக்கு மார்ச் 27-ஆம் தேதி முதல் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, 2-ஆவது சுற்று தண்ணீர் தற்போது வரை திறக்கப்படாததால், முதல் சுற்று தண்ணீரை நம்பி பயிர் செய்த விவசாயிகள், தொடர்ந்து பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் போனதால் பயிர்கள் கருகும் நிலை
ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிஏபி பாசனம் பெறும் ஆயக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டடம், கோவை டு ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில்
அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, நீண்ட நேரமாகியும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. பின்னர் பல்லடம் பொதுப் பணித் துறை அதிகாரிகள் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் உடனடியாக உயிர் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் தெரிவித்து தொடர்ந்து நான்கு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி