பாஜக வேட்பாளரை மாற்றக்கோரி மக்கள் போராட்டம்

65பார்த்தது
பாஜக வேட்பாளரை மாற்றக்கோரி மக்கள் போராட்டம்
குஜராத்தில் மே 7 மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ராஜ்கோட் தொகுதியில் பாஜக சார்பில் பர்சோத்தம் ரூபாலா போட்டியிடுகிறார். தனது பிரச்சாரத்தின் போது, “ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டு வீட்டுப் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்ததாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு அந்த சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டம் நடத்துகின்றனர். வேட்பாளரை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி