டெல்லி போலீசார் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மூன்று இளைஞர்கள் ஸ்கூட்டியில் செல்கின்றனர். வாகனம் வேகமாகச் சென்றதால், நடுவில் சென்றவர் தனது நண்பரை பின்னால் தூக்கி சாலையில் வீசியுள்ளார். அவர் கீழே விழுவதைப் பார்த்து மற்ற இருவரும் சிரித்துக்கொண்டே வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். மற்றொரு வாகனத்தில் சென்றவர்கள் இந்த சம்பவம் முழுவதையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.