தாராபுரத்தில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் நகர திமுகவினர் மற்றும் இளைஞர் அணி சார்பில் கொண்டாடினார். இதில் காலை முதல் நிகழ்ச்சியாக திமுக நகரச் செயலாளர் சு. முருகானந்தம் ஏற்பாட்டில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் அண்ணா சிலை அருகே திமுக கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் திமுக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பிரியாணி விருந்து வழங்கி கேக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மைக்கோல் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.