தாராபுரத்தில் திமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சனை செய்த ஒன்றிய பாஜக அரசை கண்டிப்பதாக கூறி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தாராபுரம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை நிலையை தண்டிப்பதாக கூறியும் வரியை மட்டும் தமிழ்நாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு நீதியை மட்டும் வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கும் மோடி அரசின் ஓரவஞ்சனையை கண்டிப்பதாக கூறியும் ஆர்ப்பாட்டத்தின்போது திமுகவினர் கோசமிட்டனர்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம் ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில்குமார் , தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன் மூலனூர் ஒன்றிய கழகச் செயலாளர் துரை தமிழரசு உட்பட தாராபுரம் மூலனூர் குண்டடம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி