திருப்பூர்: கல்குவாரிகள் திறக்கக் கூடாது... விவசாயிகள் எதிர்ப்பு

53பார்த்தது
திருப்பூர் அருகே கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குவாரிகளை திறக்கக் கூடாது என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவடடம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
குவாரிகளின் உரிமம் புதுப்பித்து மீண்டும் குவாரிகள் இயக்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குவாரிகள் இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. குவாரிகளில் அதிக அளவில் வெடி பொருட்கள் வெடிப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. அதேபோல் காலாவதியான உரிமத்தை வைத்துக்கொண்டு குவாரிகள் நடத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் குவாரிகளை நடத்த அனுமதிக்க கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குவாரிகளை நம்பி வாழ்வாதரம் நடத்தி வருவதாகவும் தொடர்ந்து குவாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறினர். இதை அடுத்து இரு தரப்பினரின்
கருத்துக்களையும் பதிவு செய்து கொண்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் இது றித்து தெரிவித்து ஒரு வார காலத்திற்குள் குவாரிகளை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி