சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீகம் தொடர்பாக பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகவிஷ்ணு என்பவர் பேசிய போது ஆசிரியருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது திருப்பூர் குளத்து பாளையம் பகுதியில் அமைந்துள்ள பரம்பொருள் அறக்கட்டளை மையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.