அவினாசி: கந்த சஷ்டி திருவிழா 7-ந் தேதி சூரசம்ஹாரம்

83பார்த்தது
அவினாசி: கந்த சஷ்டி திருவிழா 7-ந் தேதி சூரசம்ஹாரம்
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 7-ந் தேதி சூரசம்ஹாரம்

அவினாசி அருகே கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்பு தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் பாடல் பெற்ற தலமாகவும், சேவூர் அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீவா லீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சோமஸ் கந்தராய் அருள்பாலிக்கும் ஸ்ரீகல்யாண சுப்ரமணிய சாமிக்கு, கந்தர்சஷ்டி திருவிழா, வருகிற 2-ந் தேதி (சனிக்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. நவம்பர் 6-ந் தேதி வரை தினசரி காலை, 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாமிக்கு அபிஷேகம், அலங் கார பூஜைகளும், மகாதீபாரதனையும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், இரவு 7 மணிக்கு, முருகர் அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் சூரசம் ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வயானை திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கப்படுகிறது. கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சேவூர் சக்தி விநாயகர் கோவிலில் சூரபத்மன் பொம்மை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினரும், ஊர்பொதுமக்களும் சிறப் பாக செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி