டிரக்ஸ் முன்னேற்றக் கழக திமுகவை விரட்டி அடிக்க வேண்டும்

62பார்த்தது
நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகனை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருந்தார். மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மத்திய அரசின் மூலம் பயன்பெற்ற பெண்கள் உடன் கலந்துரையாடிய பின் பேசிய அவர் , நான் என்னெல்லாம் உங்களுக்கு திட்டங்கள் பண்ணியிருக்கோம் என பெரிய பட்டியலுடன் வந்தேன் , நாங்கள் இதை சொன்னால் ஊடகங்கள் நம்ப மாட்டாங்க ஆனால் நீங்களே சொன்னீங்க , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திட்டம் வந்து சேருமா என நினைத்தார்கள், கழிப்பிடம் , கான்கிரீட் வீடு ஏழை மக்களுக்கு மோடி ஐயா எம் பி , எம் எல் ஏ இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொண்டு வந்து சேர்த்துள்ளார் , சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு திட்டம் தீட்டி குழுக்கே பணம் கொடுத்து உதவியுள்ளோம் , ஓட்டு போட்டா டாய்லெட் போடலையா போ காட்டுக்கு என மோடி ஐயா நினைக்கவில்லை ஓட்டு போட்டவர்களுக்கும் கோடாதவர்களுக்கும் கழிவறைகளை கட்டிக் கொடுத்தார். குடும்ப அரசியல் செய்வேன் மக்கள் ஆதரவு கொடுக்கும் வரை அது தப்பில்லை எனறு மறைமுகமாக முதல்வர் பேசி வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி