நல்லாற்றில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க சமூக கோரிக்கை

585பார்த்தது
நல்லாற்றில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க சமூக கோரிக்கை
அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி பகுதியில் அர சுப்பணியாளர் நகரில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இதன் மத்தியில் நல்லாறு உள்ளது. பருவ மழைக்காலத்தில் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அவினாசி தாமரை குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். இந்த நிலையில் நல்லாற் றின் அருகில் தனியார் நிறுவனம் ஒன்று பல ஏக்கர் பரப்பள வில் வீட்டு மனைகள் அமைத்து வருவதாகவும் அதற்காக வழி ஏற்படுத்த நல்லாற்றின் குறுக்கே மண் நிரப்பி ஆற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் "காலம் காலமாக மழைக் காலங்களில் நல்லாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று வழியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. விவ சாயிகளின் நீர் ஆதாரமாக இந்த நல்லாறு உள்ளது. ஆற்றின் அருகில் வீட்டு மனை அமைப்பவர்கள் ஆற்றில் மண் போட்டு நிரப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுபற்றி அவர்களிடம் கேட்டால் முறையாக பதில் சொல்லவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது எங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது நாளை (இன்று) வந்து பிரச்சினைக் குரிய இடத்தை ஆய்வு செய்வதாக கூறியுள்ளனர். ஆற்றின் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தப்படும்” என்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி