கோவில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை

85பார்த்தது
கோவில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை
அவினாசிலிங்கேசுவரர் கோவில் உண்டியலில் ரூ. 27 லட்சம் காணிக்கை

அவினாசியில் வரலாற்று சிறப்பு மிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதமும், தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கையாக தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்னாம்பாள், கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட் டது. அதில் தங்கம் 53. 860 கிராமும், வெள்ளி 225. 74 கிராமும், பணம் ரூ. 27 லட்சத்து 68 ஆயிரத்து 579 இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி