எம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து

85பார்த்தது
எம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து
கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கினார். திங்கள்கிழமை மாலை, கமந்தகி எல்லையில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில் இருந்துள்ளார். ஆனால், விபத்துக்குள்ளான காரில் எம்எல்ஏ டிரைவர் சதீஷ், துப்பாக்கி ஏந்திய காவலர் சந்திரசேகர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி