திருப்பதி கோர சம்பவம்: ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

60பார்த்தது
திருப்பதி கோயிலில் நேற்று(ஜன.08) இரவு சொர்க்க வாசல் நிகழ்ச்சிக்கான இலவச டோக்கன் வழங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 40 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனிடையே உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த மல்லிகாவின் உடலை வாங்க மறுத்து அவரது கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி