திருப்பதி கோயில் சொர்க்கவாசல் பிரவேசத்திற்கான இலவச தரிசன டோக்கன்கள் பெற பக்தர்கள் முண்டியடித்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்ததோடு 40 பேர் வரையில் காயமடைந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (ஜன. 09) காலை 10:30 மணிக்கு திருப்பதிக்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்திக்கிறார்.