இ-சேவை மையங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், 2024ஆம் ஆண்டு 33,554 என்ற அளவுக்கு இ-சேவை மையங்கள் இருமடங்கு அதிகரித்துள்ளது. இ-சேவை மையங்கள் போன்ற வழிமுறைகளால் 1.28 கோடி பேருக்கு நிதி வழங்கப்படுகிறது. இனி அனைத்தும் டிஜிட்டல் முறையில்தான் இருக்கும். டிஜிட்டல் குற்றங்களை தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.