OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது அவர் சகோதரி ஆன் ஆல்ட்மேன் பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த 1997 முதல் 2006-ஆம் ஆண்டு வரை தங்களது சிறு வயதில் சாம் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதே நேரம் சாம் ஆல்ட்மேன் தனது சகோதரியின் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.