திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி இலவச தரிசன டோக்கன் நேற்று (ஜன. 08) விநியோகம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த நிலையில் அவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்த பிரதமர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது" என்றார்.