சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணையின் கட்டுமானம், செயல்பாடு மற்றும் நீர் தேக்கம் காரணமாக பூமியின் சுழற்சி 0.06 மைக்ரோ வினாடிகள் குறைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு காரணம் பூமியின் நிறை மறுபகிர்வு ஆகும். நீர்த்தேக்கத்தில் அதிக நீர் குவிந்ததால் அது கிரகத்தின் மேற்பரப்பில் எடையை மாற்றுகிறது. இந்த அணை யாங்சே ஆற்றின் மேல் 185 மீட்டர் உயரமும், 2 கி.மீ நீளமும் கொண்டது. இங்கு 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.