திருப்பதி கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. எதிர்பாராத அந்த துயர சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன் என கூறியுள்ளார்.