சென்னை அம்பத்தூரில் சொகுசு கார் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாவின் சிக்னல் அருகே சாலையோரம் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர், டீ குடிப்பதற்காக சென்றபோது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உடனே விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.