பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி இன்று தொடக்கம்

63பார்த்தது
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று (ஜன., 09) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் வழங்கி தொடங்கி வைக்கவுள்ளார். இன்று முதல் ஜன., 13ஆம் தேதி வரை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி