உண்டியலில் விழுந்த ஐ-போனை அதன் உரிமையாளர் ரூ.10,000க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். சென்னை அடுத்த திருப்போரூர் முருகன் கோயிலின் உண்டியலில் விழுந்த தனது ஐ-போனை அதன் உரிமையாளர் தினேஷ் ரூ.10,000 கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளார். அறநிலையத்துறை விதிகளின்படி செல்போன் ஏலத்தில் விடப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் போன் உண்டியலில் விழுந்த நிலையில், 4 மாதத்திற்கு பிறகு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.